Wednesday, 12 June 2013

எனக்கு இருந்த அன்புத் தோழி... 

எனக்கொரு தோழி இருந்தாள்... இப்பொழுதும் இருக்கிறாள்... பெயர்... ம்ம்ஹ்ஹ்ஹ்... பெயர் வேணாம்... நான்கு வருடங்களுக்கு முன்னர்... நான் உயர்தரப் பரீட்சையை முடித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களின் பின்னர்...

அவள் ஒரு தனியார் பாடசாலையின் ஆசிரியையாக இருந்தாள்... நானும் அவளும் தொலைபேசி பாவிக்கத் தொடங்கிய புதிது.. எங்கள் இருவருக்கும் ஒரே வயது தான்... எனது நாளொன்றின் அனைத்து செயற்பாடுகளும் அவளிடம் பரிமாறப்படும்... அவளும் எல்லா நிகழ்வுகளையும் என்னிடம் பரிமாறுவாள்... இருவரும் அதிகாலை 4.30 க்கு எழும்புவது முதல் இரவு 11 மணி தாண்டி தூங்கும் வரை எல்லாமே நேரடி அஞ்சல் செய்யப்படும்...

ஆனால், அவள் இருந்த இடமோ என்னிலிருந்தும் சுமார் 300 கிலோ மீட்டர்களுக்கும் அப்பால்... அவளது எல்லா செயற்பாடுகளும் சமிக்ஞை மூலம் எனக்கு தெரியப்படுத்தப்படும்.. எங்களது எண்ணம், பேச்சு, ஆசை எல்லாமே ஒன்றாகத்தானிருந்தது... எமது எதிர்பார்ப்பு சமூகம் சார்ந்ததாக இருந்தது... அதில் கொஞ்சம் சுய நலமும் இருந்தது.. பெரும்பாலும் நாங்கள் ஒருவருக்கொருவர் நல்ல விஷயங்களையே பேசிக் கொள்வோம்.. உலகில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், அறிவியல் தகவல்கள், கண்ட, கேட்ட, பார்த்த சம்பவங்கள் எமது உரையாடல்களின் தலைப்புச் செய்திகளாக இருக்கும்.. அன்றைய எமது அனுபவங்களும் அதில் உள்ளடங்கியிருக்கும்..

உண்மையில் அவள் எனக்கு அன்புத் தோழியாக... இல்லை, ஆருயிர்த்தோழியாக இருந்தாள்.. நாங்கள் உடலளவில் தூரமாக இருந்தாலும் மனதளவில் ஒண்றித்து விட்டோம்.. மிக நெருக்கமாகி விட்டோம்... எங்களுக்குள் காதல் உணர்வுகள் துளிர்விடத் தொடங்கி விட்டன... அதிகமாக அன்பைப் பரிமாறிக் கொண்டோம்... சில நாட்களில்... இருவரும் காதலர்களாகி விட்டோம்.. எனது வாழ்க்கையின் முதல் காதல் இது; முதல் காதலி இவள்... எதிர் கால்த்தைப் பற்றி நிறைய கனவு கண்டோம்... எப்படியெல்லாம் வாழ்க்கை நடத்தலாம் என கருத்துப் பரிமாறினோம்... எமது வாழ்க்கையின் சந்தோஷத்தை உணர்ந்தோம்... மிகவும் சந்தோஷமான தருணம் இது...

ஆனால்... இந்த சந்தோஷம் அதிக நாட்களுக்கு நிலைக்கவில்லை... அவளது வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள்... எமது தலைகளில் பாரிய இடி விழுந்தது போன்ற உணர்வு... நான் அவளது வீட்டாருடன் போட்டி போடுவதற்கு எனக்கு வயதும் போதவில்லை; பணமும் கையில் இருக்ககவில்லை... நான் தோற்றுப் போனேன்... இல்லை, நாம் தோற்றுப் போனோம்... கவலை எம்மை ஆட்கொண்டது; வாழ்க்கையே வெறுத்தது.. எம் இயலாமையை எண்ணி வருந்தினோம்.. இருந்தும் இறைவனின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டோம்.. எல்லாமே முடிந்து விட்டது...

அன்புத் தோழியாக இருந்தாள்;
ஆருயிர்க் காதலியானாள்;
மனைவியாகவில்லை;
மீண்டும் தோழியானாள்!
ஆனால், முன்பிருந்த தோழி வேறு...
இப்போதிருக்கின்ற தோழி வேறு...
#இவள் போன்ற இனிய தோழி என் வாழ்க்கையில் யாரும் கிடைப்பது அரிது..!!

Saturday, 6 April 2013

கல்லூரியின் அனுபவ அலைகள் with ஷாலிம்
                                                                 தொடர் 02.

லொள்ளு எப்.எம் உருவான கதை....




2011 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம்.... எமது கல்லூரியின் கடைசி இரு வாரங்கள்... எல்லோர் வாயிலும் ஒரே பேச்சு... Facebook, Youtube இல் எல்லாம் very popular, comments... அது தான் லொள்ளு எப்.எம். இந்த லொள்ளு எப்.எம் இணை உருவாக்கியவர்கள் நானும் நண்பன் ஜோர்ஜும். எனவே நாங்கள் தான் இதன் உரிமையாளர்கள்.. நான் வானொலிப் பிரிவைச் சேர்ந்தவன். ஜோர்ஜ் தொலைக்காட்சிப் பிரிவைசேர்ந்தவன். இருவரும் சேர்ந்து தான் இந்த லொள்ளு எப்.எம் இணை உருவாக்கினோம்.
  

இந்த லொள்ளு எப்.எம் உருவானதற்கு  ஒரு  கதை  இருக்கிறது. பெரிய பாட்டி வடை சுட்ட கதை எல்லாம் இல்ல... கல்லூரி நாட்களில் நாங்கள் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள். இன்றும் அந்த உறவு தொடர்கிறது. சக்தி News 1st கு Internship training போனது முதல், எல்லா இடங்களுக்கும் ஒன்றாக சுற்றுவது,  ஒரே பஸ்ஸில் பயணிப்பது என எங்கள் நெருக்கம் அப்போது இன்னும் அதிகரித்தது. மட்டுமல்லாமல் நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து விட்டால் அந்த இடமே ரகளையாக தான் இருக்கும். நாங்கள் பேசுவது எல்லாமே லொள்ளுத்தனமாகாத்தான்... நகைச்சுவையாகவே பேசிக்கொண்டிருப்போம். இதை நாங்கள் Mic முன்னாடி பேசி rocord பண்ணிக்கொள்ளலாம் என ஒரு யோசனை எனக்கு தட்டியது. இதை நான் ஜோர்ஜிடம் சொன்ன பொது அவனும் ok என்றான். பின்னர் இருவரும் studio போய் Mic ஐ On பண்ணி லொள்ளுத்தானமாகவே பேசி ஒலிப்பதிவு செய்து கொண்டோம். பின்னர் அதை கொஞ்சம் edit செய்து இடையில் கொஞ்சம் மசாலா சேர்த்து பேஸ்புக், Youtube இல் upload செய்தோம். நாங்கள் அதற்கு வைத்த பெயர் தான் "லொள்ளு எப்.எம்". அதன் தாரக மந்திரம் "குதிரைக்கு கொள்ளு; வாழ்க்கைக்கு லொள்ளு". எமது முதலாவது நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. பெயருக்கும்தான்... அதன் theme music உம் ரொம்ப popular ஆனது. நண்பர்கள் எங்களை வாழ்த்தி தொடர்ந்தும் ஊக்கமளித்தனர்.. எனவே நண்பர்கள் தந்த உற்சாகத்தில் இன்னும் சில தயாரிப்புக்களை செய்தோம். Facebook இலும் நேரடியாகவும் அதற்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்துகொண்டிருந்தன. அடுத்த இரண்டு வாரங்களில் சுமார் 10 ற்கும் மேற்பட்ட தயாரிப்புக்களை செய்தோம். "லொள்ளு அண்ட் கொள்ளு with Joe n Shaa", "அதிரடி அரசியல்" போன்ற நிகழ்ச்சிகள் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன. இன்னும் பல திட்டங்கள் இருந்தாலும் கால அவகாசமும் வளங்களும் பின்னர் சரியாக அமையவில்லை. இறுதிப் பரீட்சையும் அடுத்த Internship training உம் நெருங்கி கொண்டிருந்தது...


கல்லூரிக்காலத்தில் எமது லொள்ளு எப்.எம் இன் விஷேஷம் ஒன்று என்னவென்றால் அதில் எங்கள் நண்பர்களை கடித்து குதறியிருப்பது தான். இதன் காரணமாக அவர்களின் செல்லமான வெறுப்புக்களையும் சம்பாதித்துக் கொண்டோம். அத்துடன் அந்த நாட்களில் நாங்கள் இருவரும் ரொம்ப Busy. சில நேரங்களில் busy இல்லாவிட்டாலும் busy போன்று காட்டிக்கொள்வோம். ஆரம்பத்தில் எங்களுக்கு ஊக்கமளித்த நண்பர்கள் கல்லூரியின் இறுதி காலப்பகுதியில் "இவங்க லொள்ளு தாங்க முடியல" என  எங்களை சலித்துக்கொண்டதும் உண்டு. நாங்கள் இருவரும் ஒன்றாக வந்தாலே "ஆஹா... லொள்ளு பாட்டி வருகுதுகள்" என்று பேசிக்கொள்வார்கள். கொஞ்சம் ஓவேராவே பில்டப் கொடுத்தது உண்மை தான். அந்த அளவுக்கு நண்பர்களை வறுத்தெடுத்தோம்... இந்த லொள்ளு எப்.எம் கல்லூரிக்கு வெளியேயும் மிக பிரபலமாக பேசப்பட்டது... இலங்கையின் முன்னணி ஊடகம் ஒன்றின் News room வரை எமது லொள்ளு எப்.எம் அதிகமாய் பேசபட்டதாக அறிந்தேன். அதே ஊடகத்தின் சில ஊடகவியலாளர்களை அண்மையில் நான் சந்தித்த போது "என்ன லொள்ளு?" என என்னை கேட்டது மறக்க முடியாதது...

இதில் ஒரு சென்டிமெண்ட் கதையும் உள்ளது. கல்லூரியின் இறுதித்  தருணத்தில் தொலைக்காட்சி வகுப்பை சேர்ந்த நண்பன் ஜோர்ஜ் என்னுடனேயே சுற்றிக்கொண்டிருந்தான். இதனால் அவனுடைய வகுப்பைச் சேர்ந்த நண்பர்கள் என்னை செல்லமாக் கோபித்துக் கொண்டதும் உண்டு. கல்லூரியின் கடைசி நாளன்று (2011 நவம்பர் 04)தொலைக்காட்சிப் பிரிவு நண்பர்களிடம் சென்று "உங்க ஜோர்ஜை உங்களிடம் ஒப்படைச்சுட்டேன், கொஞ்ச நாட்களா உங்களிடமிருந்து ஜோர்ஜை பிரித்ததுக்கு என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று ஜோர்ஜை அவர்களிடம் கொடுத்து சொன்ன போது என் கண்கள் கலங்கின...